SELANGOR

ஐந்து  பஜார் ரமலான் வர்த்தகர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்கு அபராதம்

ஷா ஆலம், ஏப். 5:  வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய  ஐந்து ரமலான் பஜார் வர்த்தகர்களுக்கு அம்பாங் ஜெயா மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.

உரிமத்தில் கூறப் பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப் பாடுகளை மீறியதற்காக அதிகபட்சமாக RM1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று யாங் டிபெர்துவான் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

” உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வணிகம் செய்கிறார்களா என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். இதுவரை கண்காணிப்பு நடவடிக்கை 80 சதவீதத்தை எட்டியுள்ளது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அமலாக்க நடவடிக்கை 4(4)(c) UUK வர்த்தகம், வணிகம் & தொழில்துறை உரிமம் (எம்.பி.ஏ.ஜே) 2007 இன் விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மற்றும் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு விலை, தூய்மை மற்றும் முகக்கவரி பயன்பாடு ஆகியவை இந்நடவடிக்கை மூலம் கண்காணிப்படுகிறது என்று அவர் விளக்கினார்.


Pengarang :