SELANGOR

ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு தொழில்முனைவோர்களின் கெம்பாக் நிகழ்வு – RM40,000 ரஹ்மா வவுச்சர்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 5: இந்த வெள்ளிக்கிழமை முதல் மெலாவத்தி அரங்கத்தில் நடைபெறும் ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு தொழில் முனைவோர்களின் கெம்பாக் நிகழ்வு வருகையாளர்களுக்கு RM40,000 ரஹ்மா வவுச்சர்களை வழங்குகிறது.

சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கார்ப்பரேஷன் (Sidec) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் மின்சார பொருட்கள் உட்பட RM20,000 வரை அதிர்ஷ்டக் குலுக்கல் வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 9 வரை நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியில் நாட்டின் புகழ்பெற்ற பாடகர் டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, லா அஹ்மத், ருஹைனிஸ் மற்றும் உயைனா அர்ஷாட் உட்பட பல பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் எஸ்கோ டத்தோ தெங் சாங் கிம் இந்நிகழ்வின் அமைப்பை அறிவித்தார். இதில் பல்வேறு பொருள்களுக்குக் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் 150 உள்ளூர் தொழில் முனைவோர்களை ஒன்றிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :