NATIONAL

இன்சூரன்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து  இரண்டு சகோதரிகளிடம் ரி.ம 658,000 ஏமாற்று

கோலா திரங்கானு, ஏப்ரல் 6: இன்சூரன்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு  ‘போன் கேம்’ சிண்டிகேட் மூலம் ஏமாற்றப்பட்டு இரண்டு சகோதரிகள் ரி.ம 658,000 இழந்துள்ளனர்.

கோலா திரங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரஹீம் முகமாட் டின்  கூறுகையில்,  முதலில்  56 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஏமாற்றப்பட்டார். பிறகு அவரது சகோதரி 62 வயது தனியார் துறையில் இருந்து   ஓய்வு  பெற்றவரும் ஏமாற்றப்பட்டதாக  கூறினார்.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கான மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்குத் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்த பட்டதாகக் கூறினார்.

“சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வதற்குப்  பயந்து  கவலை  கொண்ட பாதிக்கப்பட்டவர் சிந்திக்காமல் அவர்களின் பேச்சை பின்பற்றினார்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருவரின் சேமிப்பையும் புதிய கணக்கில் மாற்ற சிண்டிகேட் உத்தரவிட்டதாகவும், பண மோசடி மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தீர்க்கப்படும் வரை அவர்கள் கணக்கை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டதாகவும் அப்துல் ரஹீம் கூறினார்.
ஒரு செய்தித்தாளில் வெளியான ‘ஃபோன் ஸ்கேம்’ தொடர்பான கட்டுரையைப் படித்து, புதிய கணக்கை தொடர்ந்து சரிபார்த்த பின்னரே, பாதிக்கப்பட்டவர் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார்.
“பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கணக்கில் சேமித்து வைக்கப்பட்ட பணம் ரி.ம 500,000 குறைந்ததை கண்டறிந்தனர், மேலும் மற்றொருவர் ரி.ம 158,000 குறைந்ததாக கூறி, அவர்கள் நேற்று கோலா திரங்கானு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு   புகார் அளித்தனர்,” என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது மிகவும் தந்திரமான குற்றவியல் மோசடி தந்திரங்கள் குறித்து பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  என்றும் அவர் கூறினார்.
– பெர்னாமா

Pengarang :