SELANGOR

எம் பி ஐ மூலம் 10,000 ரஹ்மா பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் கூப்பன்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 6: மாநில அரசு சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் 10,000 ரஹ்மா பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் கூப்பன்களை (பிளாட்ஸ்) பொதுமக்களுக்கு விநியோகிக்க மொத்தம் RM50,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரமலான் பஜார்களில் உணவுகளை வாங்குவதற்காக நேற்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை RM5 மதிப்புள்ள கூப்பன்கள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என தொழில் முனைவோர் மேம்பாட்டு எஸ்கோ தெரிவித்துள்ளது.

“பொருளின் விலை RM 6 ஆக இருந்தால், வாடிக்கையாளர் தங்கள் சொந்தப் பணத்தை சேர்க்க வேண்டும்” என்று ரோட்சியா இஸ்மாயில் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

நேற்று, பள்ளிகள், மசூதிகள், குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் (B40) மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சமூகங்களுக்கு மொத்தம் 600 கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன

ஹிஜ்ரா மேற்பார்வையில் புதிய வர்த்தகர்களை ஆதரிப்பதற்காக இங்குள்ள செக்‌ஷன் 7யில் ரமலான் பஜார் வருகையாளர்களுக்கு மொத்தம் 400 கூப்பன்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், பத்து தீகா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரோட்சியா சிலாங்கூர் மக்கள் அன்றாட பணிகளை எளிதாக்க ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

“அதனால்தான் ரம்ஜான் பஜார் செக்‌ஷன் 7இல் உள்ள வர்த்தகர்களை நாங்கள்  பிளாட்ஸில் பதிவு செய்கிறோம். எனவே, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்வதை எளிதாக்கும்.

“இதனால், அவர்களும் கூட்டமாக இருக்க வேண்டியதில்லை மற்றும் பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிக்க போராட வேண்டிய அவசியமில்லை. உணவை ஆர்டர் செய்து வந்து எடுத்துச் செல்ல வேண்டும்,” என்றார்.

கூப்பன்கள் விநியோக செய்யப்படும் இடங்களின் பட்டியலைக் கண்டறிய பொதுமக்கள் https://platselangor.com என்ற இணையதளத்தை நாடலாம்.


Pengarang :