NATIONAL

நான்கு ஆடம்பரக் கார்கள் தீயில் அழிந்தன- டாமன்சாராவில் சம்பவம்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 10- லோரியிலிருந்து இறக்கும் போது ஏற்பட்ட
தீவிபத்தில் நான்கு ஆடம்பரக் கார்கள் கடுமையாக சேதமடைந்தன.
இச்சம்பவம் இங்குள்ள தாமான் ஈக்கோ ஆரா டாமன்சாராவில் இன்று
அதிகாலை நிகழ்ந்தது.

வாகன விற்பனை மையம் ஒன்றின் எதிரே நிகழ்ந்த இச்சம்பவம்
தொடர்பில் இன்று பின்னிரவு 12.30 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாகச் சிலாகூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச்
சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாகச் சினார்
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தை அடைந்த போது ஒரு பி.எம்.டபள்யூ. எக்ஸ் 5 ரக் கார்,
இரு பி.எம்.டபள்யூ.5 ரக்க் கார்கள் மற்றும் ஒரு பி.எம்.டபள்யூ. 7 சிரிஸ்
கார் அகியவை தீப்பற்றி எரிவதைக் தீயணைப்பாளர்கள் கண்டதாக அவர்
தெரிவித்தார்.

இந்த தீச்சம்பவத்தில் இரு கார்கள் 70 விழுக்காடு சேதமடைந்த
வேளையில் மற்ற இரு கார்கள் 100 விழுக்காடு அழிந்தன என்று அவர்
குறிப்பிட்டார்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் விடிற்காலை மணி
1.10 அளவில் தீயணைப்பாளர்கள் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்
என்றார் அவர்.

தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு இன்னும் ஆராயப்பட்டு வருவதாக
அவர் மேலும் சொன்னார்.


Pengarang :