SELANGOR

750 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்

ஷா ஆலம், ஏப்ரல் 10: தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் மொத்தம் 750 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஐடில்பித்ரியை முன்னிட்டு RM200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.

ஜோம் ஷாப்பிங் பேராயன் திட்டத்தின் கீழ் 550 கூப்பன்கள் மாநில அரசால் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 200 கூப்பன்கள் தொகுதி சேவை மையத்தால் வழங்கப்பட்டதாகவும்  சட்டமன்ற  உறுப்பினர்  போர்ஹான் அமான் ஷா கூறினார்.

“ராயா உபகரணங்களை வாங்குவதற்கு உதவி தேவைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இத்திட்டம் நிதிச் சுமையைக் குறைக்க உதவுகிறது.

“எனவே, அதிகமான குடியிருப்பாளர்களுக்கு உதவ நாங்கள் எங்கள் சொந்த ஒதுக்கீட்டை வழங்குகிறோம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஐடில்பித்ரியைக் கொண்டாட வேண்டும் என விரும்புகிறோம், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பந்திங்கில் உள்ள எகொன்சேவ் பல்பொருள் அங்காடியில் வவுச்சரை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு மொத்தம் 37,250 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் RM200 மதிப்பிலான ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன. அதற்கு மொத்த ஒதுக்கீடு RM7.45 மில்லியன் ஆகும்.

இந்த ஆண்டு, முன்முயற்சி விகிதம் ஒரு குடும்பத்திற்கு RM200 ஆக அதிகரிக்கப்பட்டது, மேலும் மாதாந்திர குடும்ப வருமான வரம்பு RM2,000 லிருந்து RM3,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

சிலாங்கூர் பட்ஜெட் 2023, மாநிலம் முழுவதும் உள்ள 82,400 பெறுநர்களுக்குப் பயனளிக்கும் வவுச்சர்களை வழங்குவதற்காக RM16.48 மில்லியன் ஒதுக்குகிறது.


Pengarang :