NATIONAL

16 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் மாணவி ஆன் கேப்ரியலுக்குக் குடியுரிமை

கோலாலம்பூர், ஏப் 10- பெற்றோரால் கைவிடப்பட்ட  ஆன் கேப்ரியல் என்ற 16 வயது  மாணவிக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் டிரா மலேசிய இயக்கத்தின் சார்பில் குடியுரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆன் கேப்ரியல் கைக்குழந்தையாக இருந்தபோது அவரை தாயார் கைவிட்டுச் சென்று விட்டார். அந்நேரத்தில் தந்தையும் காலமானதால் ஆன் கேப்ரியல் ஆதரவற்றவர் ஆனார்.  

இவர் இந்நாட்டில் பிறந்ததற்கான எந்தவொரு பத்திரம் மற்றும் தஸ்தாவேஜூகளும் 
இல்லை. கைக்குழந்தை முதல் ஆன் கேப்ரியலை  தாமான் அம்பாங்  புக்கிட் தெரத்தாயைச் சேர்ந்த  ஆரோக்கியசாமி - அன்னாம்மாள் தம்பதியர் எடுத்து வளர்ந்து வந்தனர்.

இவருக்கு குடியுரிமை பெற்றுத் தர ஆரோக்கியசாமி டிரா மலேசிய இயக்கத்தின் 
தலைவர் சரவணனின் உதவியை நாடினார்.

பின்னர் மனித வள அமைச்சர் சிவகுமாரின்  உதவியும் நாடப்பட்டது. இப்போது இறுதியாக அந்த மாணவிக்கு மலேசியக் குடியுரிமை கிடைத்துள்ளது.  தமக்கு மலேசியக் குடியுரிமை கிடைக்க பேருதவி புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் டிரா 
மலேசிய சரவணன் ஆகியோருக்கு ஆன் கேப்ரியல் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Pengarang :