SELANGOR

500 முன்னணி சுகாதார ஊழியர்கள் உடன் நோன்பு துறப்பு – டத்தோ மந்திரி புசார்

காஜாங், ஏப்ரல் 10: டத்தோ மந்திரி புசார் நேற்று செர்டாங் மருத்துவமனையில் உள்ள 500 முன்னணி சுகாதார ஊழியர்கள் உடன் நோன்பு துறந்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாலை 6.30 மணியளவில், பொது சுகாதார எஸ்கோ  டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய எஸ்கோ போர்ஹான் அமான் ஷா மற்றும் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் ஆகியோருடன் வந்தார்.

அமிருடின் தனது உரையில், இந்த ஆண்டு நோன்பு துறப்பு அரசு ஊழியர்களுடன் தனித்தனியாக நடத்தப்படுவதாகவும்  முன்னணி  சேவையாளர்கள்  மற்றும்   அவர்களின்  தியாகங்களுக்கு மதிப்பளித்து, பாராட்டு தெரிவிப்பதின்  அடையாளமாகும் இது, என்றார்.

முந்தைய ஆண்டுகள் போல்  பாதுகாப்புக் குழு, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் ஒன்றாக விழாவை  நடத்தாமல் தனித்தனியாக ஏற்பாடு செய்கிறோம்,“ என்றார்.

” ஒவ்வொரு குழுவும்  சில பிரத்தியோக சவால்களை  எதிர்நோக்கி இருக்கும் , அவர்களின்  சவால்களை  அறிய , ஆராய இது நமக்கு சிறந்த தளமாகவும் இருக்கலாம் . இதன் மூலம் சுகாதார மையத்தை வலுப்படுத்தவும் அதற்குக் கவனம் செலுத்தவும் முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :