NATIONAL

மாற்றியமைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஒரு நபர் கடுமையாக காயப்பட்டார்

கோலா திரங்கானு, ஏப்ரல் 11: இன்று அதிகாலை கோலா நெருஸ் நகரில் மாற்றியமைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததாக நம்பப்படும் சம்பவத்தால் நபர் ஒருவரின் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 27 வயதுடைய நபருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கோலா திரங்கானு மாவட்டத் துணைக் காவல்துறைத் தலைவர் சூப்ரெண்ட் வான் முகமட் ஜாக்கி வான் இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டபோது, பாதிக்கப்பட்டவரின் 29 வயது சகோதரர், வீட்டின் அருகே பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டபின், காவல்துறையை அழைத்ததாகக் கூறினார்.

“இருப்பினும், வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், தனது சகோதரரின் இரு கைகளிலும் காயங்கள் இருப்பதைக் கண்டார். பட்டாசு வெடித்து விளையாடியதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு தரப்பினரின் தீய செயலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் காரணமாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சந்தேகிக்கவில்லை,” என்றார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக இங்குள்ள சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் வழக்கு விசாரிக்கஒரு நபர் கடுமையாக காயப்பட்டார்  மாற்றியமைக்கப்பட்ட பட்டாசு பட்டதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் நான்கு குழந்தைகள் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த ரமலான் மாதத்தில் திரங்கானுவில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது என்று வான் முகமட் ஜாக்கி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :