SELANGOR

850 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன – டெங்கில் தொகுதி

ஷா ஆலம், ஏப்ரல் 11: டெங்கில் தொகுதியில் மொத்தம் 850 குறைந்த வருமானம் கொண்ட (B40) குடும்பங்கள்  RM170,000 மதிப்புத்தக்க ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.

அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ ரோம்லி இஷாக் கூறுகையில், முதல் கட்டமாக 277 பெறுநர்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

“மீதமுள்ளவை ஏப்ரல் 15 ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் வழங்கப்படும். இது பெறுநர்கள் ஐடில்பித்ரிக்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க உதவும்.

சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனம் (பெகாவானிஸ்) ஐடில்ஃபித்ரி உதவியை 10 பெறுநர்களுக்கு வழங்கியதாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் ரிம 200 பெற்றதாகவும் ரோம்லி கூறினார்.

இந்த ஆண்டு சிலாங்கூரில் மொத்தம் 37,250 ஏழ்மையான குடும்பங்கள் ஐடில்ஃபித்ரி  கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன. அதன் மொத்த ஒதுக்கீடு RM7.45 மில்லியன் ஆகும்.

மாநில அரசாங்கம் சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் வவுச்சர்களை வழங்குவதற்காக RM16.48 மில்லியனை ஒதுக்கியது.


Pengarang :