NATIONAL

அதிக சந்திப்புகளை நடத்த சுகாதார அமைச்சு இணக்கம்- ஒப்பந்த மருத்துவர் போராட்டக் குழு தகவல்

புத்ரா ஜெயா, ஏப் 12- ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு
காண்பதற்கு ஏதுவாக மேலும் அதிகமான கூட்டங்களை நடத்த சுகாதார
அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளதாக எச்.டி.கே.எனப்படும் ஒப்பந்த மருத்துவர்
போராட்ட இயக்கம் கூறியுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபாவுடன் நடைபெற்ற 40
நிமிட சந்திப்பின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில்
இதுவும் ஒன்றாகும் என்று எச்.டி.கே. பேச்சாளர் டாக்ட முகமதுத யாசின்
கூறினார்.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் இச்சந்திப்பின்
போது அமைச்சரிடம் தாங்கள் சமர்ப்பித்ததாக இச்சந்திப்புக்குப் பின்னர்
செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

ஒப்பந்த மருத்துவர்களுக்கும் அண்மையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்
குழுவுக்கும் (எச்.எல்.சி.) இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும்
வகையில் சுகாதார அமைச்சு எச்.டி.கே. அமைப்புடன் தொடர்ந்து
தொடர்பில் இருந்து வரும் என்று அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்த மருத்துவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கையாள்வதற்கு
அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி உள்பட
பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளின் உயர் அதிகாரிகளை
உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை கடந்த மார்ச்
31ஆம் தேதி இணக்கம் தெரிவித்ததாக டாக்டர் ஜலிஹா முன்னதாக
கூறியிருந்தார்.


Pengarang :