NATIONAL

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தார்

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 12: கம்போங் அல்மாவில் உள்ள வீட்டில் நேற்று தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி பெண் (OKU) ஒருவர் உயிரிழந்தார்.

43 வயதான பாதிக்கப்பட்ட நுரைடா ஹாஷிம், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவர். மேலும் மருத்துவக் குழுவின் பரிசோதனையில் பெண் இறந்து விட்டதைக் கண்டறியும் முன், அவரது அறையில் படுக்கையில் மயக்கமடைந்து இருந்தார்.

மலேசிய தீயணைப்பு மீட்பு துறை (JBPM) பினாங்கு செயல்பாட்டு அதிகாரி முகமட் ஃபஸ்லீ முகமட் கூறுகையில், மாலை 5.08 மணிக்கு தீ விபத்து குறித்து தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

“தீயணைப்புத் துறையினர் வந்து, சுமார் 250 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மாடி கல் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டனர், மேலும் வீட்டிற்குள் ஒரு பெண் இன்னும் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“வீட்டில் உள்ள ஒரு அறையில் படுக்கையில் இருந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றினர், ஆனால் மருத்துவக் குழுவின் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார்” என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மாலை 5.31 மணி அளவில் மற்ற வீடுகளுக்குத் தீ பரவாமல் தனது தரப்பில் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், மாலை 6.26 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப் பட்டதாகவும் முகமட் ஃபஸ்லீ கூறினார்.

தீயினால் வீட்டின் 40 வீதமான பகுதி எரிந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை விசாரணையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார்.

 

– பெர்னாமா


Pengarang :