NATIONAL

நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

அலோர் ஸ்டார், ஏப்.12: போகோக் சேனா, தஞ்சோங் முசாங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்றிரவு நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கோத்தா ஸ்டார் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அமாட் சுக்ரி மாட் அக்யர் கூறுகையில், தலை மற்றும் உடல் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்த அம்மூன்று ஆண்களும் 19 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். மேலும், பலத்த காயமடைந்தவர் 14 வயதுடையவர்.

“இரவு 10.50 மணியளவில் பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒரு லாரியை மோதிய விபத்து தொடர்பான தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் அனைத்து வாகனங்களும் அலோர் ஸ்டாரில் இருந்து ஜாபி, போகோக் சேனா நோக்கி பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பி முடித்த 56 வயதுடைய நபரொருவர் ஓட்டிச் சென்ற நிசான் லாரி ஒன்று வீதியின் இடது புறப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, அதன் பின் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் திடீரென மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில், “SYM VF3i, Honda RS-X மற்றும் Yamaha Y15ZR“ மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் “Honda RS-X“ மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயது இளைஞரின் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. .

“பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அலோர்ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன, அதே நேரத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்” என்று ஏசிபி அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

– பெர்னாமா


Pengarang :