SELANGOR

56 சமையல் குறிப்புகளைக் கொண்ட டாபூர் சிலாங்கூர் கையெழுத்துப் பிரதி வெளியீடு

ஷா ஆலம், ஏப்ரல் 12: மாநில அரசு வனிதா பெர்டயா சிலாங்கூர் மூலம் டாபூர் சிலாங்கூர் எனப்படும் 56 சமையல் குறிப்புகளைக் கொண்ட கையெழுத்துப் பிரதியை வெளியிட்டது.

பெண்கள் மற்றும் குடும்ப எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூட், 91 பக்கங்களைக் கொண்ட அப்புத்தகம் 56 சிலாங்கூர் தொகுதிகளின் (DUN) பல்வேறு தனித்துவமான சமையல் குறிப்புகளை வழங்குகிறது,` என்றார்.

“ரெசிபிகளைப் பற்றியும், இந்த மாநிலத்தின் சமையல் அடையாளம் என்னவென்றும் நாங்கள் சாதாரணமாகப் பேசத் தொடங்கியபோது இந்தப் புத்தகம் வெளியிட எண்ணம் தோன்றியது.

” அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய, நவீன உணவுகள் மற்றும் இனிப்புகள் உட்பட ஒரு தொகுதிக்கு ஒரு செய்முறையை என நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இன்று சுல்தான் அப்துல் அஜீஸ் ஜூபிலி மண்டபத்தில் சிலாங்கூர் மகளிர் பிரீமியர் அல்-குர்ஆன் கதம் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பின் (பெகாவானிஸ்) தலைவர் டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முஹமட் அவர்களும் இதில் கலந்து கொண்டார்.

டாபூர் சிலாங்கூர் பிரதியை இணையத்தின் வழி https://bookcafe.com.my/dapur-selangor-bukan-sekadar-buku-resepi/?fbclid=IwAR3_QtaurZOuu1B12wNGN-QMLqKDC1wJi3_pc0azN3Jm4VeHuno for Rx5MK5 பெறலாம்.


Pengarang :