NATIONAL

அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சின் பெயர் மாற்றம்

கோலாலம்பூர், ஏப் 12- அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல்
அமைச்சு உருமாற்றம் காண்பதோடு முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழிலியல் அமைச்சு (மிட்டி) எனவும் பெயர் மாற்றம் காண்கிறது.

இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த
பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக்கூடிய, உள்நாட்டு முதலீடுகளை
அதிகரிக்கக்கூடிய, அனைத்துலக வர்த்தகத்தை வலுப்படுத்தக் கூடிய
மற்றும் நிலையான தொழிலியல் மேம்பாட்டிற்கு ஆக்கத்திறன்
அளிக்கக்கூடிய முதன்மை உந்து சக்தியாக அமைச்சு தொடர்ந்து
விளங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

புதிய, தரமான மற்றும் உயர் தாக்கம் கொண்ட முதலீடுகளைத் தொடர்ந்து
ஈர்க்கும் கடப்பாட்டை அமைச்சு தொடர்ந்து கொண்டிருக்கும். அதே சமயம்
நடப்புத் தொழில்துறையையும் அது வலுப்படுத்தும் எனவும் கூறியது.


Pengarang :