NATIONAL

ஐடில்பித்ரியை  முன்னிட்டு  கைதிகள் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், ஏப்ரல் 12: ஹரி ராயா ஐடில்பித்ரி அன்று மூன்றாவது மற்றும் நான்காவது நாள் சிறைக் கைதிகள்  தங்கள்  குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நடவடிக்கை மறுவாழ்வு மையம், சிறப்பு மறுவாழ்வு மையம், சிறப்பு தடுப்பு மையம் மற்றும் ஹென்றி கர்னி பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியது.

சிறைச்சாலை துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில் முஸ்லிம் கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆன்லைன் சந்திப்புகளும் (வீடியோ அழைப்புகள்) அனுமதிக்கப்படுகின்றன.

நேருக்கு நேர் முறையைத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்கள் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும், அவற்றில் பார்வையிடும் நேரம் காலை 8.15 முதல் மாலை 4.15 வரை ஆகும்.

“வருகையாளர்கள் சிறைச்சாலை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள். சிறைக்குள் நுழையும் போது மற்றும் வெளியேறும் போது சிறை அதிகாரிகளால் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

www.prison.gov.my, i-Visit பயன்பாடு, தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சந்திப்பை மேற்கொள்ளும் பார்வையாளர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று சிறைச்சாலை துறை தெரிவிக்கிறது.

“முன்பதிவு செய்யப்பட்ட பிறகு, சந்திப்பின் தேதி மற்றும் இதர விவரங்களுக்கும்,  மேலும் தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :