NATIONAL

ஏப்ரல் 2 முதல் 8 வரை டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் குறைந்துள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 13: ஏப்ரல் 2 முதல் 8 வரை இந்த ஆண்டின் 14வது தொற்றுநோய் வாரத்தில் (ME) பதிவான டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, முந்தைய வாரங்களுடன்  ஒப்பிடும்போது 5.4 சதவீதம் குறைந்து 2,239 ஆக உள்ளது. டிங்கி காய்ச்சல் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

இன்றுவரை டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,926 ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும், மொத்தம் 20 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அவர் ஓர் தெரிவித்தார்.

14வது வாரத்தில் சிலாங்கூரில் 51 இடங்கள், பினாங்கில் 22 இடங்கள், சபாவில் எட்டு இடங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவின் மத்திய பிரதேசத்தில் ஆறு இடங்கள், பேராக், கெடாவில் தலா இரண்டு இடங்கள் மற்றும் நெகிரி செம்பிலான் மற்றும் லாபுவானில் தலா ஒரு இடம் என மொத்தம் 93 ஹாட்ஸ்பாட் வட்டாரங்கள் பதிவாகியுள்ளன அவர் கூறினார்.


Pengarang :