NATIONAL

சூடானில் இருக்கும் 29 மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 16: சூடான் ஆயுதப் படைகளுக்கும், ஆதரவு விரைவு படையினருக்கும் இடையே சனிக்கிழமை சண்டை நிகழ்ந்து உள்ளது. அதனால், சூடானின் அரசியல் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கார்டூமில் உள்ள மலேசியத் தூதரகம், நகரத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.

சூடானில் உள்ள தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து 29 மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து மலேசியர்களும் நிலைமை சீராகும் வரை தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியது.

சூடானுக்கான மலேசியத் தூதுவரின் இல்லத்தில் இருந்து தற்போது தற்காலிகமாகச் செயல்படும் மலேசியத் தூதரகத்தைத்+249 90 075 3633, +249 18 328 6379 அல்லது மின்னஞ்சல்: [email protected]. மூலம் தொடர்புகொள்ளலாம்:

மேலும், விஸ்மா புத்ரா ஆபரேஷன்ஸ் அலுவலகத்தை +603-8887 4570, +603-8887 4770 மற்றும் +603-8887 4445 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

– பெர்னாமா


Pengarang :