SELANGOR

சிலாங்கூர் ஃபுரூட் வெளி  சுற்றுப்பயணம் மற்றும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

கோலா சிலாங்கூர், ஏப் 16: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (PKPS) நேற்று ஏற்பாடு செய்த சுற்றுப்பயணம் மற்றும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட டிக் தொக் புகழ் பெற்றவர்கள் மற்றும் ஊடகப் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இங்குள்ள சிலாங்கூர்  ஃபுரூட் வெளியில் முதன் முறையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் வாழும் மக்களுக்கு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது

1,000 ஹெக்டேருக்கு மேல் உள்ள பண்ணையில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர சுற்றுப்பயணத்தின் போது வருகையாளர்கள் டிராம் சவாரி செய்வதன் மூலம் அழகான இயற்கைக்காட்சி மற்றும் ஆரோக்கிய சூழலை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

வருகையாளர்கள் கொய்யாப் பழங்களை பறித்தல், உப்பு கலந்த முட்டைகளைத் தயார் செய்து அதனை வீட்டுக்கு எடுத்து செல்லும் வாய்ப்பையும் பெற்றனர்

கூடுதலாகப் பொதுமக்கள் முயல்களை பார்வையிடுதல் மற்றும் ஜெட்டியில் படகு சவாரி செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், பிகேபிஎஸ் நோன்பு திறப்பதற்கு 1,000 கிலோகிராம் மூசாங் கிங் டுரியன் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சியை வருகையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது.


Pengarang :