NATIONAL

விமானப் பயண விவகாரங்கள் பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பிற்குட்டது அல்ல

புத்ராஜெயா, ஏப் 17- விமானப் பயணச் சேவை தொடர்பான விவகாரங்கள்
பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார
வரம்பிற்குட்பட்டதல்ல என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சு கூறியது.

இப்பிரச்சனை வான் போக்குவரத்து ஆணையத்தின் (மேவ்கோம்)
கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்று அமைச்சு
வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

விமானச் சேவை தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் 2016ஆம் ஆண்டு
மார்ச் முதல் தேதி தொடங்கி உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார
வரம்பிற்குட்பட்டதல்ல என்று பிரிவு 99(1)(சி)யுடன் திருத்தம் செய்யப்பட்ட
2015ஆம் ஆண்டு பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின் 99(1)(சி) பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சு தெளிவுபடுத்தியது.

எனினும், விமானச் சேவை தொடர்பில் இதுவரை பெறப்பட்ட புகார்கள்
மேல் நடவடிக்கைக்காக மேவ்கோம் கவனத்திற்குக் கொண்டுச்
செல்லப்பட்டதாக அது குறிப்பிட்டது.


Pengarang :