NATIONAL

போலீசாரின் அதிரடிச் சோதனையில் மூவர் கைது- வெ.400,000 போதைப் பொருள் பறிமுதல்

ஈப்போ, ஏப் 18- போலீசார் இங்கு மேற்கொண்ட அதிரடிச் சோதனை
நடவடிக்கையில் மூன்று ஆடவர்களை கைது செய்யப்பட்டதோடு
அவர்களிடமிருந்து 400,000 வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் என
நம்பப்படும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.

பெர்ச்சாமில் உள்ள பேராங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று
பிற்பகல் 2.20 மணியளவில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பேராக்
மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி
கூறினார்.

நாற்பது முதல் 61 வயது வரையிலான அம்மூவரையும் ஈப்போ மாவட்டப்
போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது
செய்யதாக அவர் சொன்னார்.

சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் ஓட்டிய வாகனத்தைத் தடுத்து நிறுத்தி
சோதனையிட்டப் போலீசார் பிளாஸ்டி பைகளில் பொட்டங்களாக
கட்டப்படிருந்த 10.4 கிலோ போதைப் பொருள் பிளாஸ்டிக்
சாக்குமூட்டையில் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த போதைப் பொருளைக் குறைந்தது 20,000 போதைப் பித்தர்கள்
பயன்படுத்த முடியும் எனக் கூறிய அவர், நாட்டின் வடபகுதியிலுள்ள
ஏஜண்ட் மூலம் இந்த போதைப் பொருளை அக்கும்பல் பெற்றுள்ளது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கைதான நபர்களின் ஒருவன் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைப்
பயன்டுத்தியுள்ளது அவனிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில்
தெரிய வந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கைதான மூவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :