NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை சீரமைப்பு பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஏப் 18- கெந்திங்-பத்தாங் காலி சாலையிலுள்ள மலைச்
சரிவுகளை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு மத்தியில் முற்றுப் பெறும்
என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம்
ஹஷிம் கூறினார்.

அப்பகுதியில் 2 கோடி வெள்ளி செலவில் தடுப்புச் சுவர்களை அமைக்கும்
பணி தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
சொன்னார்.

தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணியை நாம் முதலில்
முடிக்கவிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறுகலான
பகுதிகளுக்கு ஏற்றது என்பதோடு நீண்ட காலம் தாங்கும் தன்மையும்
கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

மலைச் சரிவு வலுப்படுத்தும் பணியை மேற்கொள்ள குத்தகையாளரையும்
நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். இந்த பணியை மேற்கொள்ள பத்து
மாதங்கள் பிடிக்கும். அடுத்தாண்டு மத்தியில் அச்சாலையை
வாகனமோட்டிகள் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

அது வரை வாகனமோட்டிகள் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள மாற்றுச்
சாலைகளைப் பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்று
அவர் சொன்னார்.

கெத்திங் ஹைலண்ட்ஸ் அருகிலுள்ள கோத்தோங் ஜெயா பாதர்ஸ்
ஆர்கானிப் பார்ம் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம 16ஆம் தேதி
ஏற்பட்ட மண் சரிவுச் சம்பவத்திற்குப் பின்னர் அந்த சாலை
போக்குவரத்துக்கு மூடப்பட்டது.


Pengarang :