NATIONAL

ஐடில்பித்ரி பண்டிக்கை காலத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்படாமல் இருக்க மாநில அரசு முயற்சி

ஷா ஆலம், ஏப்.18: ஐடில்பித்ரி பண்டிக்கை காலத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்படாமல் இருக்க மாநில அரசு முயற்சி செய்யும்.

பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் நிலைமையைக் கண்காணிக்க அதன் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தும் என்று உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளின் எஸ்கோ தெரிவித்துள்ளது.

“பண்டிக்கை காலத்தின் போது, ஏஜென்சியின் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள். மேலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் நேரம் கூட வேலை செய்வார்கள்.

“எல்லாம் சுமூகமாக நடக்கும் போது தான் மக்கள் இப்பண்டிக்கையைச் சிறப்பாகக் கொண்டாட முடியும்,” என்று  ஐ ஆர் இசாம் ஹாஷிம் கூறினார்.

நாடு வெப்பமான கால நிலையை அனுபவித்தாலும் சிலாங்கூரில் உள்ள ஆறுகள் மற்றும் அணைகளின் நீர் மட்டம் இன்னும் சீராக உள்ளது என்று இஷாம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், மாநிலத்தில் இன்னும் மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர் குறைந்ததாக எந்த தகவலும் இல்லை.

“எங்கள் விநியோக ஆதாரம் அணைகளில் இருந்து மட்டுமல்ல, சில ஆறுகள் சுத்தமான தண்ணீரையும் வழங்குகின்றன என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்தாலும், இது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.


Pengarang :