NATIONAL

பிரதமர் நாளை கிள்ளான் மக்களுடன் நோன்பு திறக்க உள்ளார்

ஷா ஆலம், ஏப்ரல் 18: பிரதமர் நாளை ஷா ஆலம் பிகே என் எஸ் வளாகத்தில் உள்ள ரமலான் பஜாருக்குச் சென்று பின்னர் கிள்ளான் மக்களுடன் செமந்தாவில் உள்ள அஹ்மதி மசூதியில் நோன்பு திறக்க உள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மடாணி மலேசியா ரம்லான் சந்துனான் நிகழ்ச்சியை முன்னிட்டு அவ்விடத்திற்கு வருகை புரியும் போது டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொள்வார்.

பிரதமருடன் பழகுவதற்கும், 2,000 பிளாட்ஸ் ரஹ்மா RM5 கூப்பன்களைப் பெறுவதற்கும் பொதுமக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பும் உள்ளது. அவை சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் விநியோகிக்கப்படும்.

புத்ரா ஜெயா பணிகளுக்கிடையில் , பிரதமர் சிலாங்கூரில்  பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மக்களைச் சந்தித்து  வருகிறார்.  கடந்த  ஏப்ரல் 8 அன்று ஷா ஆலமின் கம்போங் பாரு   ஹைகோமில் உள்ள மக்கள் வீட்டுத் திட்டத்தில் (பிபிஆர்) கித்தா- உன்தோக்  -கித்தா (கே2கே) திட்டத்தை நிறைவு செய்தார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சமூகத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் வீட்டுத் திட்டத்திற்கு RM35 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டைப் பிரதமர் அறிவித்தார்.

மேலும், அவர் பிப்ரவரி 9 அன்று சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்கு (யுனிசெல்) வருகை புரிந்தார். பிரதமராகப் பதவியேற்றப் பிறகு அவர் வருகைப் புரிந்த முதல் உள்ளூர் உயர் கல்வி நிறுவனமாகும்.


Pengarang :