SELANGOR

சிலாங்கூரில் உலு லங்காட் இரண்டாவது அதிக டிங்கி சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 19: காஜாங் நகராட்சி நிர்வாகப் பகுதியில் ஜனவரி முதல் ஏப்ரல் 8
வரை மொத்தம் 2,511 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதன் தலைவர் நஜ்முடின் ஜெமைன் கூறுகையில், உலு லங்காட் மாவட்டத்தில் பதிவான
சம்பவங்கள் கிட்டத்தட்ட 70 சதவீதமாக உள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, சிலாங்கூரில் உலு லங்காட் இரண்டாவது அதிக டிங்கி
சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளது (3,618 சம்பவங்கள்). கடந்த ஆண்டு இதே
காலக்கட்டத்தில் ஒப்பிடுகையில் தற்போது 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளாக எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை,“என்று
அவர் கூறினார்.

காஜாங் நகராட்சி நிர்வாகத்தில் உள்ள 99 வட்டாரங்களில் டிங்கி சம்பவங்கள்
பதிவாகியுள்ளன. மேலும், மூன்று இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளன. அவை காஜாங், சுங்கை ரமால் மற்றும் பலகோங் தொகுதிகளில் தலா
ஒரு பகுதி என நஜ்முடின் கூறினார்

காஜாங் நகராட்சியில் ஏப்ரல் 2 மற்றும் 8 வரை 165 சம்பவங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன,“என்று கூறினார்.

சிலாங்கூர் முழுவதும் இதுவரை 15,725 டிங்கி சம்பவங்களும் அதில் மூன்று இறப்புகளும்
பதிவாகியுள்ளன.


Pengarang :