NATIONAL

கார் நிறுத்தக் குற்றங்களுக்கு வெ.56 லட்சம் அபராதம் வசூல்- காஜாங் நகராண்மைக் கழகம் தகவல்

ஷா ஆலம், ஏப் 19- இவ்வாண்டு மார்ச் மாதம் வரை கார் நிறுத்தக்
கட்டணம் தொடர்பான 97,693 குற்றப்பதிவுகளுக்குத் தீர்வு கண்டதன் வழி
காஜாங் நகராண்மைக் கழகம் 56 லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 14,168 மேல் முறையீட்டு மனுக்களை நகராண்மைக்
கழகம் பெற்றதாக அதன் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்
நகராண்மைக் கழகத்தின் சட்டப் பிரிவு மேற்கொண்ட ஆக்ககரமான
நடவடிக்கைகள் மூலம் இந்த தொகை பெறப்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.

அபராதத் தொகையைச் செலுத்தாதவர்களுக்கு மாதம் மூன்று முறை
நினைவுட்டல் கடிதங்களை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளை
நகராண்மைக் கழகத்தின் சட்டப் பிரிவு மேற்கொண்டதாகவும் அவர்
தெரிவித்தார்.

இவ்வாண்டில் இதுவரை வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதத்
தொகையைச் செலுத்தாத 14,000 பேருக்கு நினைவூட்டல் கடிதங்கள்
அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர். காஜாங் நகராண்மைக் கழக
தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நகராண்மைக் கழகத்தின்
மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

பொது மக்கள் அபராதத் தொகையைச் செலுத்துவதை ஊக்குவிக்கும்
நோக்கில் அபராதக் கழிவு உள்ளிட்ட சலுகைகளை வழங்க நகராண்மைக்
கழகத்தின் சட்டப் பிரிவு முன்வந்துள்ளதாகவும் அவR மேலும்
குறிப்பிட்டார்.

முதன் முறையாக நடத்தப்படும் இந்த அபராதக் கழிவுத் திட்டத்திற்குப்
பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்
சொன்னார்.


Pengarang :