SELANGOR

இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடம் அறிமுகம் – காஜாங் நகராட்சி

ஷா ஆலம், 19 ஏப்ரல்: காஜாங் நகராட்சி, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடங்களின் இருப்பை மேம்படுத்த இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடத்தை அறிமுகப்படுத்துகிறது, குறிப்பாக அடுத்த ஜூன் 1 முதல் முக்கியமான நேரங்களில் இச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

யாங் டிபெர்துவான் நஜ்முடின் ஜெமைன் கூறுகையில், வணிகப் பகுதிகள் உட்பட பொதுமக்கள் கவனம் செலுத்தும் இடங்களை உள்ளடக்கிய மொத்தம் 152 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

” அடுத்த ஜூன் 1 முதல் 14 வரை முதல் கட்டமாகத் தொடங்கப்படும் இச்சேவை ஜூன் 15 ஆம் தேதி 12 பகுதிகளை உள்ளடக்கி முழுமையாக அமலாக்கத்திற்கு வரும். ஜூன் 1 முதல் 14 வரை பொதுமக்களுக்கு அறிமுகம் மற்றும் கற்றல் காலமாகும்.

இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடக் கட்டணம் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 50 சென் ஆகும். மேலும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை இச்சேவை அமலில் இருக்கும்.

“இரண்டு மணிநேரம் முடிந்த பிறகு கால நீட்டிப்பு அனுமதிக்கப்படாது மற்றும் வாகன உரிமையாளர்கள் நேரம் முடிந்தவுடன் உடனடியாக வெளியேற வேண்டும்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP), வெலக்ஸ் பார்க்கிங், “Touch N Go Wallet“ மற்றும் ஜோம் பார்க்கிங் பயன்பாட்டை பயன்படுத்தி மட்டுமே இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடப் பயன்பாட்டிற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் மாதாந்திர பாஸ் அல்லது பணத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நஜ்முடின் கூறினார்.


Pengarang :