NATIONAL

புகை மூட்டத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முகக்கவரி அணிவீர்- பொது மக்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, ஏப் 19 – புகை மூட்டம் மற்றும் சூரிய ஒளியின் நேரடித்
தாக்கத்தை தவிர்த்த முகக்கவரி மற்றும் தொப்பிகளை அணிவதோடு
குடையையும் பயன்படுத்தும்படி பொது மக்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பம் மற்றும் புகை மூட்டம் காரணமாக நோய் பாதிப்பு ஏற்படும்
சாத்தியம் அதிகம் உள்ளதால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர்
டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

கடும் உஷ்ணம் மற்றும் புகைமூட்டத்தின்தாக்கத்தை எதிர்கொள்வதை
தவிர்க்க கட்டிடங்களுக்கு வெளியே குறிப்பாக, திறந்த வெளியில்
இருப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிக்கை ஒன்றில் அவர்
சொன்னார்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் புகை மூட்டம் மற்றும்
வெப்ப வானிலை தொடர்பில் அமைச்சர் இந்த அறிவுரையை
வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டில் புகை மூட்டப் பிரச்சனை
கடுமையாக இருக்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும்
பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது அண்மையில்
கூறியிருந்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் நாட்டில் தோட்ட மற்றும்
தொழில் துறைகள் வழக்கம் போல் முழுவீச்சில் செயல்படத்
தொடங்கியுள்ளதால் புகை மூட்டப் பிரச்சனையும் அதிகரிப்பதற்குச்
சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :