NATIONAL

டத்தோ ரமணன் தலைமையில் மித்ரா சிறப்பாக செயல்படும்- அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

கோலாலம்பூர், ஏப் 19- மித்ராவின் (மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு) தலைவராகக் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.இரமணன் நியமிக்கப்பட்டதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.

மித்ராவின் சிறப்பு நடவடிக்கை குழுவில்  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், செனட்டர்  சி.சிவராஜ், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யூனேஸ்வரன், மித்ரா பொது இயக்குநர் கே.இரவீந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு சிறப்பாக செயல்பட்டு மித்ரா நிதி முறையாக இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மீது   அதிக அக்கறை  கொண்டு பட்ஜெட்டில் மித்ராவுக்கு பத்து கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளது.

இந்த பத்து கோடி வெள்ளி முறையாக இந்திய சமுதாயத்திற்க்ச் சேரும் என்ற 
நம்பிக்கை பிறந்துள்ளது.

கடந்த காலங்களை போல் இல்லாமல் மித்ரா மானியம் முழுவதும்  முறையே  மக்களை சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே எங்களின் எண்ணமாக இருக்கிறது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் மித்ரா மானியம் பயன் படுத்தி முடிக்க வேண்டும் 
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்திய சமூக அமைப்புகள் முறையாக விண்ணப்பம் செய்து இந்திய 
சமுதாயம் நன்மை அடையும் வகையில் திட்டங்களை  மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Pengarang :