NATIONAL

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 26.2 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 20- அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்
கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாதம் 9
முதல் 15ஆம் தேதி வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின்
எண்ணிக்கை 100,000 பேருக்கு 26.2 விழுக்காடு என்ற அளவில் இருந்தது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளில்
பெரும்பாலோர் நோய்ப் பாதிப்புக்கான சாத்தியம் அதிகம் உள்ள மூத்த
குடிமக்கள் மற்றும் கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்
என்று சுகாதார அமைச்சு கூறியது.

எனினும், இந்த நோய்த் தொற்று அதிகரிப்பு அரசு மருத்துவமனைகளின்
சுமையை அதிகரிக்கவில்லை என்றும் அவை வழக்கம் போல்
சுகாதாரச் சேவையை வழங்கி வருவதாகவும் அது தெரிவித்தது.

கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை கோவிட்-
19 நோய்த் தொற்று தொடர்புடைய மரண எண்ணிக்கை 0.3 விழுக்காடாக
இருந்தது. உயிரிழந்தவர்களில் 80.7 விழுக்காட்டினர் 60 வயதுக்கும்
மேற்பட்டவர்களாகவும் 82.6 விழுக்காட்டிர் பல்வேறு நோய்களால்
பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் என அமைச்சின் அறிக்கை
தெரிவித்தது.

முதலாவது ஊக்கத் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டவர்களை விட
தடுப்பூசியை அறவே செலுத்திக் கொள்ளாதவர்கள் மத்தியில் மரண
எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரை மலேசியர்களில் 50 விழுக்காட்டினர்
அல்லது 1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 196 பேர் முதலாவது
ஊக்கத தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 2.5 விழுக்காட்டினர்

அதாவது 819,150 பேர் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் செலுத்திக்
கொண்டுள்ளனர்.


Pengarang :