ANTARABANGSA

சூடான் உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஆக உயர்வு

வாஷிங்டன், ஏப் 20- சூடான் இராணுவத்திற்கும் அதிரடி துணை
இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்து வரும் போரில் இதுவரை 300 பேர்
வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் மனதை உருக்கும் வகையில்
உள்ளன. அங்கு நிகழ்ந்து வரும் சண்டையில் இதுவரை 300 வரை பேர்
உயிரிழந்துள்ளதோடு மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை
இயக்குநர் தெட்ருஸ் அட்ஹனோம் கிப்ரயாசுஸ் கூறினார்.

அனைத்து விதமான தாக்குதல்களையும் குறிப்பாகப், பொது மக்கள் மற்றும்
சுகாதார நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நான்
வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளதாக அனாடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பணியாளர்களுக்கான நீர்,மின்சாரம் மற்றும் உணவு விநியோகம் குறைந்து
வருவதோடு மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதால் சண்டையில்
காயமடைந்து உடனடி சிகிச்சைத் தேவைப்படும் ஆயிரக்கணக்கான
நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சையளிக்க முடியாத சூழல்
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போர்க் களத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில்
புகலிடம் பெறுவதற்கு ஏதுவாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை
அமல்படுத்தும்படி போரிடும் தரப்பினரை அவர் மறுபடியும்
வலியுறுத்தினார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி அமைதிப்
பேச்சுகளே என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :