NATIONAL

கோம்பாக் டோல் சாவடியில் காலை 11.00 மணி முதல் வாகன நெரிசல் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 20- நோன்புப் பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்புவதால் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்குச் செல்லும் தடத்தில் இன்று காலை 11.00 மணி முதல் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.

 கோம்பாக் டோல் சாவடியிலிருந்து  புக்கிட் திங்கி வரை  போக்குவரத்து அதிகமாக 
உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த நெடுஞ்சாலையில் நேற்று முதல் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால், வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. பகாங்கின்  கெந்திங் செம்பா வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

எனினும், கிழக்குக் கரை நெடுஞ்சாலை  1 (எல்பிடி) மற்றும் எல்பிடி 2 இல் வாகனப் போக்குவரத்து இரு திசைகளிலும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று  கூறினார்.

பொது மக்கள் 1800-88-0000 என்ற ப்ளஸ்லைன் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் www.twitter.com/plustrafik என்ற ட்விட்டர் பக்கம் அல்லது எல்.எல்.எம். லைன் 1800-88-7752 மற்றும் www.twitter.com/llminfotrafik   வாயிலாக போக்குவரத்து நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில், பிளஸ்  எனப்படும் வடக்கு மற்றும் தெற்கு நெடுஞ்சாலையில்   சுங்கை பீசி டோல் பிளாசா மற்றும் ஜாலான் டூத்தா டோல் பிளாசாவில் போக்குவரத்து சீராக 
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pengarang :