NATIONAL

ஹரி ராயா ஐடில்பித்ரி சந்தப்பான் நிகழ்விற்கு யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் வருகை புரிந்தனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 22: யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இன்று நடைபெற்ற ஹரி ராயா ஐடில்பித்ரி சந்தப்பான் நிகழ்வுக்கு வருகை புரிந்தனர்.

யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் அவரின் துணைவியார் இருவரும் காலை 10.10 மணியளவில் இஸ்தானா நெகாரா வில் உள்ள டேவான் சந்தப்பான் உத்தாமா வந்தடைந்தனர். அவர்கள் இருவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அவர்களால் வரவேற்கப் பட்டனர்.

அமைச்சர்களில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி மற்றும் நாடாளுமன்ற செனட் சபையின்  சபாநாயகர் தான்ஸ்ரீ ரைஸ் யாதிம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்விற்கு வருகை புரிந்தனர்.

அதுமட்டுமில்லாமல், இவ்விழாவில் சிங்கப்பூர், இந்தோனேசியா, அமெரிக்கா, துருக்கி, புருணை உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பூர்வகுடி சமூகத்தினர் அடங்கிய சுமார் 2,000 பேர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் அவரின் துணைவியார் வருகையாளர்களுடன் நேரத்தைச் செலவிட்டனர்.

இன்று மதியம் 2 மணி வரை இவ்விழா நடைபெற்றது.

– பெர்னாமா


Pengarang :