NATIONAL

நேற்று இரவு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஐடில்பித்ரியின் மூன்றாம் நாளான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வடக்கில், கெபாலா பதாஸிலிருந்து ஊத்தான் கம்போங் வரை, அலோர் ஸ்டார் உத்தாராவிலிருந்து குருன் வரை, சுங்கை பட்டாணி உத்தாரா முதல் பெர்தாம் வரை மற்றும் புக்கிட் தம்புன் முதல் ஜாவி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது.

“கூடுதலாகப், பண்டார் பாரு முதல் சுங்கை பேராக் வரை, சிம்பாங் பூலை முதல் தப்பா ஆர்&ஆர் பகுதி வரை, பிகாம் ஃபார்ம் ஸ்டாப் முதல் சுங்காய் வரை மற்றும் தஞ்சோங் மாலிம் முதல் ரவாங் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

“தப்பாவிலிருந்து சிம்பாங் பூலை வரை, ஈப்போ உத்தாரா முதல் சுங்கை பேராக் வரை, கோலா கங்சார் முதல் ஆர்&ஆர் புக்கிட் கந்தாங் வரை மற்றும் சாங்கட் ஜெரிங் முதல் ஜாவி வரை வடக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்றது,” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கோலாலம்பூர்-காரக் விரைவுச் சாலையில் அதே போக்குவரத்து நிலைமை தான் இருந்ததாக ட்விட்டர் வழியாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்லைன் கட்டணமில்லா லைன் 1800-88-0000, ட்விட்டர் பக்கம் www.twitter.com/plustrafik அல்லது மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய லைன் 1800-88-7752 மற்றும் www.twitter.com/ llminfotrafik என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்து தகவலைப் பெறலாம்.

– பெர்னாமா


Pengarang :