SELANGOR

புயல் காற்றில் விழுந்த மரங்களை செந்தோசா தொகுதி பணிப்படை விரைந்து அகற்றியது

கிள்ளான், ஏப் 25- கிள்ளான், தாமான் செந்தோசா பகுதியில் நேற்று மாலை பெய்த புயல் காற்றுடன் கூடிய கனத்த மழையில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

குறிப்பாக, லோரோங் தெமங்கோங் 19 பகுதியில் மரங்கள் விழுந்த சம்பவத்தில் புரோடுவா கஞ்சில், புரோட்டோன் சாகா உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்ததோடு சாலையிலும் போக்குவரத்து தடைபட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செந்தோசா தொகுதியின் சிறப்பு பணிப்படை உறுப்பினர்கள் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் பந்தாஸ் விரைவு உதவிக் குழுவினரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உறுப்பினர்களும் மரங்களை அகற்றும் பணியில் உதவினர்.

புயல்காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யும் பணியை விரைந்து மேற்கொண்ட கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் மகேந்திரன் மற்றும் செந்தோசா சிறப்பு பணிப்படையின் தலைவர் நரேன் ஆகியோருக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :