கோலாலம்பூர், ஏப்ரல் 26: 2024/2025 ஆம் ஆண்டு, கல்விக் காலண்டர் அமர்வில் முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
https://idme.moe.gov.my என்ற இணையதளத்தில், கல்வி அமைச்சின் ஒருங்கிணைந்த அமைப்பு (MOEIS) பொது மேலாண்மை தொகுதி மூலம் இணைய வழி பதிவு செய்யலாம் என்று கல்வி அமைச்சகம் (KPM) இன்று முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கத் தகுதியுடைய குழந்தைகள் 2017 ஜனவரி 2 முதல் 2018 ஜனவரி 1 வரை பிறந்த மலேசியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.
– பெர்னாமா