SELANGOR

மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற முதியோர்களுக்கு இலவசப் போக்குவரத்து சேவை – ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், ஏப்ரல் 27: தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற முதியோர்களுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 மணி தொடங்கி மாலை 5 மணி வரை இச்சேவை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளி கார்டு வைத்திருப்பவர்களுக்கு (OKU) இச்சேவை வழங்கப்படுவதாக அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

ஷாரின் அஹ்மட்டின் கூற்றுப்படி, ஊனமுற்றோரின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட இரண்டு யூனிட் வேன்கள் மேலும், முதியவர்களை ஏற்றிச் செல்ல புரோட்டான் எக்ஸோரா கூடுதலாக வழங்கப்படுகின்றன.

“ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான போக்குவரத்து சேவைகள் குறைவாகவும், கடினமாகவும் இருப்பதால், இந்த சமூக வாகனத்தை ஏற்பாடு செய்துள்ள ஷா ஆலம் மாநகராட்சியின் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துகிறது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் ஷா ஆலம் மருத்துவமனை, செக்‌ஷன் 7 சுகாதார கிளினிக், செக்‌ஷன் 19 சுகாதார கிளினிக், புக்கிட் குடா சுகாதார கிளினிக் மற்றும் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, சுங்கை பூலோ பொது மருத்துவமனை, சுங்கை பூலோ ஹெல்த் கிளினிக் மற்றும் யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையம் ஆகியவை ஆகும்.

இந்த வாகனத்தில் சக்கர நாற்காலி உள்ள நோயாளிகளை ஏற்றுவதற்கு ‘டெயில் லிப்ட்’ பொருத்தப் பட்டதாகவும், ஒவ்வொரு பயணத்திலும் இரண்டு பயணிகள் மற்றும் ஓர் ஓட்டுனர் மட்டும் இடம்பெற முடியும் என்றும் ஷாரின் கூறினார்.

” வாகனம் நகரும் போது சக்கர நாற்காலி நகராமல் இருக்க பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

ஷா ஆலம் மாநகராட்சி சமூக மேம்பாட்டுத் துறையை 03-5522 2732 அல்லது 03-55105133 நீட்டிப்பு 1381 என்ற எண்ணின் வழி தொடர்பு கொள்வதன் மூலம் சேவைக்கான முன்பதிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டும்.


Pengarang :