NATIONAL

மகளிர் 150 மீட்டர் (மீ) தனிநபர் போட்டியில் தேசிய நீச்சல் வீராங்கனை தங்கம் வென்றார்

கோலாலம்பூர், ஏப்ரல் 30: 2023 சிங்கப்பூர் பாரா நீச்சல் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளான நேற்று OCBC நீர்வாழ் மையத்தில் நடைபெற்ற மகளிர் 150 மீட்டர் (மீ) தனிநபர் போட்டியில் தேசிய நீச்சல் வீராங்கனை பிரெண்டா அனெலியா லாரி தங்கப் பதக்கம் வென்றார்.

https://www.titanium-sportservice.de/ என்ற இணையத் தகவல்படி,  SM 1-4 பிரிவில் (உடல் ஊனமுற்றோர்) போட்டியிட்ட 18 வயதான் பிரெண்டா அனெலியா, 4 நிமிடங்கள் 13.63 வினாடிகள் நேரத்தைப் பதிவு செய்தார். இதன் வழி 5:19.35 வினாடிகள் பதிவு செய்த பிரேசில் வீராங்கனை சுசானா ஷ்னார்ண்டோர்ஃபின் சவாலை முறியடித்தார்.

போட்டியில் பிரெண்டா மற்றும் சுசானா மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முறையின்படி, நிகழ்வில் மூன்றுக்கும் குறைவான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதால் பிரெண்டா மட்டுமே பதக்கம் பெறுவார்.

சிங்கப்பூரில் 2023 பாரா நீச்சல் உலகச் சாம்பியன்ஷிப் போட்டி நாளை வரை தொடரும்.

– பெர்னாமா


Pengarang :