NATIONAL

ட்விட்டர் ஊடகக் கட்டுரைகளைப் படிக்கக் கட்டணம் வசூலிக்கப்படும்

மாஸ்கோ, ஏப்ரல் 30: ட்விட்டர் ஊடகக் கட்டுரைகளைப் படிக்க விரும்பும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் விருப்பத்தை அறிமுகப்படுத்தும் என்று சமூக ஊடகத் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சனிக்கிழமை தெரிவித்தார்.

“அடுத்த மாதம் தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் இத்தளம் ஊடக வெளியீட்டாளர்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்.

“மாதாந்திர சந்தாவிற்குப் பதிவு செய்யாதப் பயனர்கள் கட்டுரையைப் படிக்க விரும்பினால், ஒரு கட்டுரைக்கு அதிக விலையைச் செலுத்த இது அனுமதிக்கிறது” என்று மஸ்க் ட்விட்டரில் தெரிவித்ததாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கும் பயனர்களுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையை வழங்குவதே இந்த புதிய செயல்பாட்டின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :