SELANGOR

நோன்புப் பெருநாளுக்குப் பிந்தைய பொருளாதாரச் சுமையைக் குறைப்பதில் மலிவு விற்பனை உதவி

கோல சிலாங்கூ, மே 9- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள் மலிவு
விற்பனை நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் பொது மக்கள்
எதிர்நோக்கியுள்ள நிதிச் சுமையைக் குறைப்பதில் பெரிதும் துணை
புரிந்துள்ளது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தை நோன்புப் பெருநாளுக்குப்
பின்னரும் தொடர்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு தங்களுக்கு மன
நிம்மதியைத் தந்துள்ளதாக குடும்ப மாதான நுர் ஹிடாயா அப்துல்லா
(வயது 42) கூறினார்.

இந்த மலிவு விற்பனை உண்மையில் எங்களின் நிதிச் சுமையைக்
குறைக்க பெரிதும் உதவுகிறது. இங்கு நான் வாங்கும் பொருள்கள் ஒரு
மாத தேவைக்குப் போதுமானதாக உள்ளது. பேரங்காடியில் இப்பொருள்கள்
இந்த விலையில் நிச்சயமாக கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையில் இவ்வளவு குறைவான விலையில்
பொருள்கள் கிடைப்பது கண்டு தாம் உண்மையில் ஆச்சரியமடைந்ததாக
இதில் முதன் முறையாக கலந்து கொண்ட தனியார் துறை ஊழியரான
அகமது இக்வான் ஷியாபிக் அகமது (வயது 24) கூறினார்.

நண்பர்கள் மூலம் இந்த விற்பனை குறித்து அறிந்து கொண்டேன். இங்கு
மிகவும் மலிவான விலையில் பொருள்கள் விற்கப்படுவது எனக்கு
வியப்பைத் தருகிறது. இதன் மூலம் ஓரளவு பணத்தை மிச்சப்படுத்த
முடிகிறது என்றார் அவர்.

இங்குள்ள புஞ்சா ஆலமில் நேற்று நடைபெற்ற ஜெராம் தொகுதி
நிலையிலான மலிவு விற்பனையில் கலந்து கொண்டப் பின்னர் சிலாங்கூர்
கினியிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :