NATIONAL

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுற்றுலாப் பயண இலக்குகள் உட்பட  பல  நிலைகளிலும்  இணைய வசதியை மேம்படுத்த வேண்டும்

பந்திங், மே 9: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுற்றுலாப் பயண இலக்குகள்  உள்ளிட்ட பல  நிலைகளிலும்   இணைய வசதியை  மேம்படுத்த வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

சேவை வழங்குநர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார். இதன்வழி பயனர்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் செலுத்தும் சந்தாவிற்கு ஏற்ப சேவை திருப்தி அளிக்க வேண்டும்..

“பயனர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக தொகை செலுத்தியும் அவர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு கவரேஜ் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே இந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் எங்கிருந்தாலும் எதிர்பார்த்தபடி சேவையை அனுபவிக்க வேண்டும், ”என்று அவர் இன்று கமுடா  2023 மீடியா ஜர்னி நிகழ்ச்சியின் நட்பு   உபசரிப்புக்கு  பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். அதில் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தியோ நீ சிங் உடனிருந்தார்.

 மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) மூலம் அவரது அமைச்சகம் பொது மக்களின் நலனுக்காக இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேம்படுத்துவதற்கு  தொடர்ந்து  அழுத்தம் கொடுக்கும். .

இதற்கிடையில், இணைய கவரேஜ் சிக்கலைப் புகாரளிப்பதில் ஊடகங்களின் முன் முயற்சிகளைப் பாராட்டிய ஃபஹ்மி, இச்செயல் சிக்கலைக் கையாள்வதிலும், சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்கள் தக்க  நடவடிக்கை எடுக்க   தொடர்ந்து தூண்டுகோலாக இருக்கும்   என்று நம்புகிறார்.

திங்கள்  கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு 22 ஊடக பயிற்சியாளர்களின் பங்கேற்புடன் மலேசியத் தகவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகப் பயணத் திட்டம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் காணப்படும் அழகு மற்றும் சுற்றுலா  மையங்களை  மேம்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :