SELANGOR

ஶ்ரீ செத்தியா தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, மே 9: ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் (ADN) தனது பதவிக் காலத்தில் அப்பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளார்.

ஹலீமி அபு பக்கர் கூறுகையில், மக்களின் பிரதிநிதியாக வெற்றிகரமாகத் தீர்த்த பிரச்சனைகளில் மொத்தக் குப்பை அகற்றுதல் மற்றும் லிஃப்ட் பராமரிப்பினை மேம்படுத்தியதும்  அடங்கும்  என்றார்.

“இதுவரை ஶ்ரீ செத்தியா சட்டமன்றத்தில் மொத்தக் கழிவுகள் தொடர்பான பிரச்சனையை KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உதவியுடன் தீர்க்க முடிந்தது.

“லெம்பா சுபாங் மக்கள் வீட்டடைப்பு திட்ட (பிபிஆர்) பகுதியில் லிஃப்ட் பராமரிப்பு தொடர்பான சிக்கல்களும் எங்களால் சமாளிக்க முடிந்தது. இருப்பினும் உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் அங்கு ஒரு புதிய பராமரிப்பு நிறுவனத்தை நியமித்ததில் இருந்து ஓரிரு சிக்கல்கள் எழுந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஹாலிமி 2018 முதல் தன் வசமுள்ள தொகுதியை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

“ மக்கள் பிரதிநிதியாக சிறந்த பணியை நான் வழங்கியுள்ளேன், எனது பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளேன், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இந்த முறையும் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) ‘போராட’ தயாராக உள்ளேன்.

“இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவுடனும், செய்யப்பட்ட பணிகளின் மூலமும்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஶ்ரீ செத்தியா தொகுதியில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையை தந்துள்ளது,” என்றார்.


Pengarang :