SELANGOR

20 நிமிடங்களுக்குள் வரிசை எண்கள் தீர்ந்துவிட்டன – ஈஜோக் தொகுதி

கோலா சிலாங்கூர், மே 9: மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விற்பனைத் திட்டத்தில் அடிப்படை தேவை பொருட்களின் விலை மலிவு என்பது அனைவராலும் அறிய பட்டுள்ளதால் ஈஜோக் தொகுதியில் வசிப்பவர்கள், எப்போதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது.

கம்போங் பாரிட் மஹாங்கின் கிராமச் சமூகப் பிரதிநிதி கவுன்சில் (MPKK) தலைவர், தனது தரப்பு வாட்ஸ்அப் மூலம் மட்டுமே இத்திட்டத்தை அறிவித்ததாகவும், இனி பேனர்கள் வைக்க தேவையில்லை என்றும் கூறினார்.

“ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (ஜேஇஆர்) திட்டத்தை ஏற்பாடு செய்யும்போது, 300 பேரின் வருகை நிச்சயம். நாங்கள் வரிசை எண்களை காலை 9 மணிக்கு விநியோகித்தாலும், குடியிருப்பாளர்கள் 8 மணிக்கே வரிசையில் நிற்கத் தொடங்குகிறார்கள்.

“எண்கள் 20 நிமிடங்களுக்குள் தீர்ந்துவிட்டன. இதனால் வரிசை எண்ணைப் பெறாத குடியிருப்பாளர்கள் உள்ளனர்” என்று சைடின் ஜோஹன் கூறினார்.

வரிசை எண்ணை பெறாதக் குடியிருப்பாளர்களும் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இத்தொகுதியில் 30 முறை ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம், குறிப்பாகக் குறைந்த வருமானம் (B40) மற்றும் நிலையான வருமானம் இல்லாத மக்களுக்குத் தொடர்ந்து பயனளிக்கும் என்றும் அவர் நம்பினார்.

இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை செயல்படுத்தப்பட்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.


Pengarang :