ANTARABANGSA

பள்ளியின் காவலாளி ஆயுதங்களுடன் வந்த கும்பலால் தாக்கப்பட்டார்

கோத்தா பாரு, மே 11: நேற்று ஆரம்பப் பள்ளியின் காவலாளி ஒருவர் கத்தி மற்றும் கெராம்பிட் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார்.

47 வயதான அக்காவலாளி மாலை 5 மணி அளவில் பணியில் இருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று பேர் அவரை அணுகினர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியவுடன், சந்தேக நபர்கள் அனைவரும் திடீரென பாதிக்கப்பட்டவரை தாக்கினர் என்று கோத்தா பாரு மாவட்டக் காவல்துறை தலைவர், உதவி ஆணையர் முகமட் ரோஸ்டி டாட் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் குபாங் கிரியானில் உள்ள யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார், தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார்.

தாக்குதலுக்கான காரணத்தை அடையாளம் காண்பது உள்ளிட்ட மேல் விசாரணைகளுக்காக சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று பெரித்தா ஹரியான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

குற்றவியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்க பட்டதாக முகமட் ரோஸ்டி கூறினார்.


Pengarang :