NATIONAL

இம்மாதம்  சேதமடைந்த சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன

ஷா ஆலம், மே 16: இம்மாதம் மாநிலம் முழுவதும் பெருமளவில் சேதமடைந்த சாலைகளின் மேம்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாக உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

இத்திட்டம் RM50 மில்லியன் செலவில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு சிலாங்கூரில் முழுமையாக சாலை செப்பனிடும் பணிகளை செயல்படுத்தப்படுவதாக ஐ ஆர் இஷாம் அசீம் கூறினார்.

“20,000க்கும் மேற்பட்ட சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், அதிக வாகனங்களின் எண்ணிக்கையால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது கடினமாக உள்ளது. சாலைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் நிலம் பலவீனமடைந்து எளிதில் சேதமடைகின்றன.

“அந்த காரணத்திற்காகச் சாலைகளை நிர்வகிக்க ஒரு வருடத்திற்கு RM500 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடுகிறோம். இந்த ஆண்டு நாங்கள் RM50 மில்லியனைச் செலவில் நிர்வகிக்கப்படாதச் சாலைகளை மேம்படுத்த உள்ளோம்” என்று இன்று டிவி 1 சேனலில் செலமட் பாகி மலேசியா நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

மாநில நிர்வாகத்தின் கீழ் உள்ள சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்தை உள்ளடக்கிய ஒரு மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை ஜனவரி 16 அன்று டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.

சாலைகளில் சேதம் ஏற்பட்டால் ட்விட்டர் செயலி மூலம் புகைப்படங்களை அனுப்பி, புகார்களை எழுதி, #infrasel #daerah #namajalan என்ற அடையாளத்துடன் புகாரளிக்குமாறு டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி அவர்கள் பொதுமக்களை ஊக்குவித்தார்.


Pengarang :