NATIONAL

2023 தோக்கோ குரு விருதை முன்னாள் தலைமையாசிரியர் பெற்றார்

மலாக்கா, மே 16- இன்று அனுசரிக்கப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
20023ஆம் ஆண்டிற்கான தேசிய தோக்கோ குரு விருதை முன்னாள்
தலைமையாசிரியரான டத்தோ டாக்டர் நுரிண்டா அலியாஸ் (வயது 61)
பெற்றுள்ளார்.

நாடு மற்றும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை உறுதி
செய்வதற்கு ஏதுவாக உன்னத மனிநேயமும் உயரிய எண்ணமும்
மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறக்கும் குணமும் கொண்டவர்களாக
ஆசிரியர்கள் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமக்கு கிடைத்த இந்த தோக்கோ குரு விருது இன்னும் பணியில் இருந்து
வரும் இதர ஆசிரியர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஊக்கமூட்டும் ஒரு
நிகழ்வாகவும் அமையும் எனத் தாம் எதிரிபார்ப்பதாக சிறந்த
தலைமையாசிரியருக்கான சி கிரேடு பெற்றவரான நுரிண்டா தெரிவித்தார்.

ஆசிரியராகவும் பள்ளி முதல்வராகவும் இத்தனை ஆண்டுகள் பணியாற்றி
கடந்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற தமக்கு
வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த தோக்கோ குரு விருதை
கருதுவதாக சபாவை பூர்வீகமாக கொண்ட அவர் சொன்னார்.

மாணவர்கள் சிறப்பான அடைவு நிலையையும் வெற்றியையும் பெறுவதில்
உதவ வேண்டும் எனும் நோக்கில் கல்விப் பணியைத் தொடக்கிய எனக்கு
இந்த உயரிய விருது வழங்கப்படும் என நான் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆயர் குரோவிலுள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் இன்று
நடைபெற்ற தேசிய நிலையிலான 52வது ஆசிரியர் தின நிகழ்வில்
நுரிண்டாவுக்கு இந்த தோக்கோ குரு விருது வழங்கப்பட்டது. இந்த
விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்.


Pengarang :