ANTARABANGSA

2025 ஆம் ஆண்டு சீ போட்டி விளையாட்டுகளை நடத்த  தாய்லாந்தின்  முன் ஏற்பாடு

புனோம் பென், மே 17: நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான  பேங்காக், சோன்புரி
மற்றும் சொங்க்லாவில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதன் மூலம்,
2025 சீ போட்டி விளையாட்டுகளை  (2025 டிசம்பர் 9 முதல் 20 வரை) நாடு வெற்றிகரமாக
நடத்தும் என்று தாய்லாந்து நம்பிக்கை கொண்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீ போட்டி விளையாட்டின் 33 வது
பதிப்பு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும்
கவனமாக  செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார் தாய்லாந்தின் விளையாட்டு ஆணையத்தின் (SAT) ஆளுநர் கொங்சாக் யோட்மணி (Gongsak Yodmani).

தங்களிடம் உலகத்தரம் வாய்ந்த சில தங்குமிடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள்
உள்ளன. எனவே புதிய உள்கட்டமைப்பை உருவாக்காது, மாறாக தற்போதுள்ள முக்கிய
மைதானமான ராஜமங்கலா ஸ்டேடியம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளை
மாற்றியமைக்கவோ அல்லது மேம்படுத்தவோ வேண்டும் என்றார்.

விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளை மூன்று நகரங்களில் உள்ள பல்கலைக்கழகத்
தங்குமிடங்கள் அல்லது ஹோட்டல்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

புதிய உள்கட்டமைப்பு எதுவும் இல்லை, ஏனென்றால் நாங்கள் எல்லாவற்றையும் ஒரு
வரையறுக்கப்பட்ட பட்ஜெட்டில் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் அது உயர் தரத்தில்
செய்யப்பட வேண்டும். (இடத்தை புதுப்பித்தல்).

ஆசியான் நாடுகளின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் குழுக்களும் எங்கள்
விருந்தோம்பல் மற்றும் நல்லிணக்கத்தை அனுபவிக்க சிறந்த சேவையை வழங்க முடியும்
என்று நாங்கள் நம்புகிறோம், என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில்
கூறினார்.

இதற்கிடையில், சீ போட்டி விளையாட்டு கூட்டமைப்புடன் (SEAGF) இன்னும் பேச்சு
வார்த்தை நடத்தப்படாததால்,  இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடங்களின்
எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகள் பேங்காக்கில் நடைபெறும்
என்றும், நீர் விளையாட்டு நிகழ்வுகள் சோன்புரியிலும், கால்பந்து மற்றும் செபக் தக்ரா
சொங்க்லாவிலும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது தாய்லாந்து ஆறாவது முறையாக இந்த போட்டி விளையாட்டை நடத்துகிறது.
இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு நாகோன் ரட்சசிமாவில் இப்போட்டி விளையாட்டு
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீ போட்டி விளையாட்டு 2027ஆம் ஆண்டு மலேசியாவிலும், 2029ஆம் ஆண்டு
சிங்கப்பூரிலும் நடைபெறவுள்ளது.

– பெர்னாமா


Pengarang :