SELANGOR

உயர் நெறியும் சிறந்த நிர்வாக முறையும் மாநில அரசு நிர்வாகத்திற்கு அடித்தளம்- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், மே 17- மக்களுக்கு மாநில அரசு ஆக்ககரமான வழியில்
சேவை வழங்குவதற்கான அடித்தளமாக உயர்நெறியும் சிறந்த நிர்வாக
முறையும் விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

இலக்கவியல் மற்றும் விவேக நிர்வாக முறையின் அமலாக்கத்திற்கு
மத்தியிலும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அடித்தளமாக
உயர்நெறியுடன் கூடிய சிறந்த நிர்வாக முறை விளங்குகிறது என்று அவர்
சொன்னார்.

உயர் நெறி, சிறந்த நிர்வாக முறை ஆகியவற்றோடு மக்களுக்கு பயன்
தரக்கூடிய சிறப்பான சேவையும் மாநில அரசின் சேவைக்கான
அடித்தளமாக இன்னும் விளங்குவதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று
அவர் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி, நாம் வழங்கும் சேவை மக்களுக்கு பயனையும்
ஆறுதலையும் தரக்கூடியதாகவும் அவர்களின் சுமையைப்
போக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மாநில அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் 185 ஊழியர்களுக்குச் சிறந்த
சேவைக்காக விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசு நிர்வாகத்தை இலக்கவியல் மயமாக்கும் திட்டத்தை
விரைவுபடுத்தும் முன்னெடுப்பு ஊழியர்களின் தயார் நிலையைப்
பொறுத்தே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலக்கவியல்மயத்தைக் கலாசாரமாக்குவது மிகவும் சவால்மிகுந்த ஒரு
பணியாகும். இலக்கியவியலை அமல்படுத்துவதற்கு முன்னர் நாம்
அதனைக் கற்றக் கொள்ள வேண்டும். காரணம் நாம் நினைத்ததை விட தொழில்நட்பம் மிகவும் விரைவாக மாற்றம் கண்டு வருகிறது என அவர் சொன்னார்.


Pengarang :