NATIONAL

போலீஸ் பிடியில் சிக்காமலிருக்க போதைப் பொருளை மண்ணில் புதைத்து வைத்த ஆடவர் கைது

கோத்தா மருடு, 18- அதிகாரிகளிடம் சிக்காமலிருப்பதற்காக ஷாபு வகை
போதைப் பொருளை நெல் வயல் ஒன்றின் அருகே உள்ள சிறிய ஆற்றின்
கரையில் புதைத்து வைத்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோத்தா மேருடு மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள்
தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில்
மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 46 வயதுடைய அந்த நபர் கைது
செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
போதைப் பொருளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக
மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைரோல்னிசால் இஷாக்
கூறினார்.

இந்த ஆடவரைக் கைது செய்த தன் மூலம் 49,500 வெள்ளி மதிப்புள்ள 1,509
கிராம் ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்று அவர்
தெரிவித்தார்.

கைதான அந்த ஆடவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்
தாண்டேக் பகுதியிலுள்ள நெல் வயல் பகுதியிலுள்ள ஆற்றோரம் அந்த
போதைப் பொருள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
என்றார் அவர்.


Pengarang :