SELANGOR

உலு யாம் பாரு, சுகாதார கிளினிக்கில்  பொது வசதியை மேம்படுத்த 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு 

ஷா ஆலம், மே 18: உலு சிலாங்கூரில் உள்ள உலு யாம் பாரு சுகாதார கிளினிக் பகுதியின் வாகன நிறுத்துமிட வசதியை மேம்படுத்தவும், சாலை அமைக்கவும் 50,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் (PSP) 1-ல் மூலம்தான் இந்த ஒதுக்கீடு பெறப் பட்டது என்று முகநூல் மூலம் பத்தாங் காலி தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது தெரிவித்தார்.

“இச்சாலை மிகவும் மோசமான நிலைமையில் இருந்ததால் போக்குவரத்துக்குக் கடினமாக இருந்தது. அதனால்தான் அவ்விடம் மேம்படுத்த உள்ளது.

இந்த சுகாதாரக் கிளினிக்கு நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாகவும், வரும் நோயாளிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட உள்ள வசதிகள் பயனர்கள் மற்றும் கிளினிக் ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்றார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் 2023 பட்ஜெட்டில், உள்ளூர் மக்களின் நலனுக்காக சிறிய திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சியாகச் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மொத்தம் RM28 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.


Pengarang :